ராமநாதபுரம் மக்கள் தொடர்பு திட்டம் நடைபெற்றது

கழுகூரணி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி ஊராட்சியில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், அதனைத்தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1,98,000 மதிப்பீட்டிலும் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.3,50,480 மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தனலெட்சுமி, இராமநாதபுரம் வட்டாட்சியர் சுவாமிநாதன், கழுகூரணி ஊராட்சி மன்ற தலைவர் கலாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story