நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்திட பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை உறுதி.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்திடவும், ஆனங்கூர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டவும் அரசிற்கு பொது கணக்கு குழு பரிந்துரைசெய்யும.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் இன்று குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளூர்) , கோ.ஐயப்பன் (கடலூர்) , எஸ்.சந்திரன் (திருத்தணி) , டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), எஸ்.சேகர் (பரமத்திவேலூர்) , கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்) ஆகியோர், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்ததாவது, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவர் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நிதிநிலை குறித்து சுழற்சி முறையில் 33 விழுக்காடு பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட மாவட்டத்தை சார்ந்த தணிக்கை பத்திகள் குறித்து பொதுக்கணக்கு குழு மாவட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்யும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட பொதுக்கணக்கு குழுவினர் அந்தந்த மாநிலங்களில் ஆய்வு செய்யும். இது நடமாடும் சட்டப்பேரவை எனப்படுகிறது. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கோரிக்கையினை ஏற்று, நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்திடவும், ஆனங்கூர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டவும் அரசிற்கு பொது கணக்கு குழு பரிந்துரை செய்யும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்தார். மேலும், இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் துறைசார்ந்த அலுவலர்கள் அனைவரும் திட்டம் குறித்து விளக்கமாவும், துல்லியமாகவும், தெளிவாகவும் எடுத்துரைதத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழுவின் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் என பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் தணிக்கை பத்திகள் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழகம், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக் கல்வித் துறை, கைத்தறி மற்றும் தூணிநூல் துறை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், நீர்வளத்துறை, உயர் கல்வித் துறை, தொழிலாளர் நல துறை, தேசிய நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளின் விளக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.31.25 இலட்சம் மதிப்பில் சேமிப்பு கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35.00 இலட்சம் மதிப்பில் வங்கி கடனுதவி, வேளாண்மை துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.43,700/- மதிப்பில் நெல் உற்பத்தி மானியம், தோட்டக்கலைத்துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.1.77 இலட்சம் மதிப்பில் நிழல் வலை குடில் பணியானை, வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.4.25 இலட்சம் மதிப்பில் டிராக்டர், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,690/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம், 2 பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.19.47 இலட்சம் மதிப்பில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1,630/- மதிப்பில் பிரெய்லி வாட்ச் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.92.27 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத்தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில் துணைச்செயலாளர் பா.ரேவதி, குழு அலுவலர் வி.சுமதி, சார்புச் செயலாளர் ஜெ.பாலசீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட வன அலுவலர் ச.கலாநிதி., ., திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story