தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை.

X
Paramathi Velur King 24x7 |25 Sept 2024 7:11 PM ISTபாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
பரமத்தி வேலூர் செப், 25: பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் பரிவார நெய்வமாக அமைந்துள்ள கால பைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால்,நெய்,மஞ்சள்,திருமஞ்சல் மற்றும் திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Next Story
