தமிழக வெற்றி கழக தூத்துக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் பிறந்தநாள் கொண்டாட்டம்.

தமிழக வெற்றி கழக தூத்துக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் பிறந்தநாள் கொண்டாட்டம்.
இளைய தளபதி விஜய் ரசிகராக இருந்த அஜிதா அக்னல் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கியவுடன் தூத்துக்குடி சட்டமன்ற பொறுப்பாளராக அஜிதா அக்னல் நியமனம் செய்யப்பட்டார். அன்று முதல் அவர் பம்பரமாக கட்சி பணியாற்றி வருகிறார். தூத்துக்குடியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், பைக், உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை, அரிசி, என நலத்திட்டங்களை வழங்கியவர். தற்போது வெளியான விஜய் படத்திற்கு நரிக்குறவர் மக்கள் மாற்றுத்திறனாளி மக்களை அழைத்துச் சென்று தன்னுடைய அமர வைத்து விஜய் நடித்த சினிமா பார்த்தார். இப்படி கட்சிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தூத்துக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் அஜிதா அக்னல் தனது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சார்பில் டூவி புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த அஜிதா அக்னலை பட்டாசு வெடித்து தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் பிரம்மாண்டமாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் இளைஞர் பட்டாளங்கள் கலந்து கொண்டு அஜிதா அக்னலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story