விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் செல்லும் வழி அருகே சிறுநீர் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
Virudhachalam King 24x7 |25 Sep 2024 5:27 PM GMT
மாற்று இடத்தில் கட்ட கோரிக்கை
விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே 14 ஆவது வார்டு தி.நகர் மற்றும் ஆலடி ரோடு பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு பிரதான வழியை பயன்படுத்தி சென்று வருகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து இப்பகுதிக்கு செல்லும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காம்பவுண்ட் சுவர் அருகே உள்ள வழியின் அருகே திடீரென சிறுநீர் கழிப்பிடம் கட்டுவதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, பள்ளி மாணவர்கள் கல்லூரி பெண்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்கள் இந்த வழியில் வந்து செல்கின்றனர். இதனால் தினமும் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் நடந்து செல்லும் இப்பகுதியில் ஆண்கள் ,சிறுநீர் கழிப்பிடம் கட்டக்கூடாது சற்று தூரம் தள்ளி கட்ட வேண்டும். என கோரிக்கை வைத்து பணியை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் செய்தனர். அப்போது அவர்கள் இப்பகுதியில் எந்நேரமும் இளைஞர்கள் பலர் நின்று கொண்டு பெண்களை கேலி கிண்டல் செய்து வருவதும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதமாய் இருந்து வருகின்றனர். இதனால் பெண்கள் மிக வேதனைப்பட்டு சென்று வருகின்றனர். மேலும் இதில் தி நகர், ஆலடி ரோடு, சக்தி நகர் காமராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்காக இந்த வழியை பயன்படுத்தி வரும் நிலையில் இளைஞர்கள் அட்டகாசம் மற்றும் திருநங்கைகள் அட்டகாசம் அதிகம் உள்ளது. தற்போது இங்கு சிறுநீர் கழிப்பிடம் கட்டினால் மேலும் அவர்களுக்கு சாதகமாக அமையும் எந்நேரமும் இங்கேயே இருப்பார்கள் அதனால் சற்று தூரம் தள்ளி மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் முருகேசன் கூறியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story