பிறந்த குழந்தைகளை ஒவ்வொன்றாக விற்று வந்த தம்பதியர்" கைது...
Edappadi King 24x7 |26 Sep 2024 12:15 AM GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட திம்ம பொதியான் வளவு பகுதியைச் சேர்ந்த சேட்டு(25)இவரது மனைவி குண்டு மல்லி(23)இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இந்த ஏழு வருடங்களில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளது.அதில் இரண்டு குழந்தைகள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு ஆறாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் சித்தூர் கிராம செவிலியர்கள் பேருகால பின் கவனிப்புக்கு சென்ற போது குண்டுமல்லி,சேட்டு அவர்கள் வீட்டில் குழந்தை இல்லை, மேலும் கடந்த 15 நாட்களாகவே பிறந்த குழந்தை இல்லாமல் கணவன் மனைவி மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். குழந்தையைப் பற்றி கிராம செவிலியர்கள் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். தொடர்ந்து கிராம செவிலியர்கள் விசாரித்ததில் சேட்டு குண்டுமல்லி தம்பதியருக்கு பிறந்த மூன்று குழந்தைகளை புரோக்கர்கள் மூலமாக ஒவ்வொன்றாக பணத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் விற்றதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல உதவி மையத்திற்கு சென்று குழந்தையை தத்து எடுப்பதாகவும் திம்பொதியான் வளவு பகுதியைச் சேர்ந்த சேட்டு குண்டுமல்லி அவர்களுக்கு பிறந்த குழந்தையோடு குழந்தைகள் நல அலுவலகத்திற்கு சென்று தத்து எடுப்பதாக கூறியுள்ளார். சேலம் மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் ராஜலிங்கம் குழந்தைகளை விற்பனை செய்ய சென்ற குண்டுமல்லி அவரது கணவர் சேட்டு மற்றும் குழந்தையோடு எடப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பெற்ற குழந்தைகளை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் செய்கள்ளார். இதனை அடுத்து எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி மற்றும் பூலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் குண்டுமல்லி,சேட்டு தம்பதியருக்கு பிறந்த மூன்று குழந்தைகளை எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் அருகே அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் உள்ள ஆறுமுகம் மகன் முனியசாமி (46) எடப்பாடி அருகே செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில் முருகன் ஆகிய இரண்டு புரோக்கர் மூலமாக ஒவ்வொரு குழந்தையும் ரூபாய் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து குழந்தையை விற்பனை செய்த தந்தை சேட்டு குழந்தை விற்பனைக்கு புரோக்கராக செயல்பட்ட முனியசாமி (46)செந்தில் முருகன் (46) ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை விற்பனையில் தொடர்புடையவர்கள் இன்னும் உள்ளனரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி அருகே இளம் தம்பதியர் பெற்ற குழந்தையை ஒவ்வொன்றாக பணத்திற்காக விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story