ஆலங்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

ஆலங்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
ஆலங்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
ஆலங்குடி கலிபுல்லா நகர் 3ம் வீதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் சிவா (28). இவர், கடந்த செப். 6ம் தேதி பழைய கோர்ட் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஆலங்காட்டைச் சேர்ந்த கருப்பையா மகன் குணசேகரன் (எ) சேகர் பாட்ஷாவை (40), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து, ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவுப்படி, சிவாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
Next Story