டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா அவர்களின் உத்தரவுப்படி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் சேகர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் இன்று திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகள், உணவகங்கள், கழிவறைகள் தாய்மார்கள் பாலூட்டும் அறை, அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகள் ஆகிய இடங்களில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க புகை மருந்து அடிக்கப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் சிவா மற்றும் நகராட்சி ஊழியர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர்
Next Story