சொத்துவரி செலுத்தாவிட்டால் வட்டி வசூலிக்கப்படும்: ஆலங்குடி பேரூராட்சி அறிவிப்பு
Alangudi King 24x7 |26 Sep 2024 3:13 AM GMT
சொத்துவரி செலுத்தாவிட்டால் வட்டி வசூலிக்கப்படும்: ஆலங்குடி பேரூராட்சி அறிவிப்பு
ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி விதிப்புகளுக்கு 2024-25 முதல் அரையாண்டு இறுதி என்பதால் பொதுமக்கள் 1 சதவீதம் வட்டியுடன் சொத்துவரி செலுத்தப்பட வேண்டியதை தவிர்த்திட முதல் அரையாண்டு கேட்புத் தொகையினை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும். மேலும் அக்டோபர் மாதத்திற்குள் 2-வது அரையாண்டுக்கான சொத்துவரி கேட்பு தொகையினை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை சலுகையின் மூலம் பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த அரையாண்டுக்கான சொத்துவரி அதே அரையாண்டுக்குள் (அதாவது முதல் அரையாண்டு கேட்புத் தொகை செப்டம்பர் மாதத்திற்குள்ளும், 2-ம் அரையாண்டு தொகை மார்ச் மாதத்திற்குள்ளும்) செலுத்தப்படாத நிலையில் இருந்தால் 1 சதவீதம் மாதாந்திர வட்டி விதித்து தொகை வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story