தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணி இடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
Thoothukudi King 24x7 |26 Sep 2024 4:25 AM GMT
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_CFA20242501.pdf என்ற இணைய தள முகவரியை பார்வையிடலாம்.
Next Story