காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், டீக்கடை மற்றும் பேக்கரி சங்கம் சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் உள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தங்களது நிறுவனங்கள் முன்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்த வில்லை என்றால் உடனடியாக பொருத்த வேண்டும் எனவும் தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் அதைத்தொடர்ந்து தங்கள் நிறுவனங்கள் முன்பாக கட்டாயமாக சிசிடிவி கேமராக்களை பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும், மேலும் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்கு எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story