ராசிபுரம் சாலையில் சாலை மறியல்

ராசிபுரம் சாலையில் சாலை மறியல்
திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் அரசு பேருந்துகள்பயணிகளை ஏற்றவோ இறக்கி விடவோ நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் சாலை மறியல்.அணைப்பாளையம் நல்லாம்பாளையம்உள்ளிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் வழிந்து தான் ராசிபுரம் செல்லவோ திருச்செங்கோடு செல்லவோ பஸ்சுக்கு வரவேண்டும்.இந்த நிலையில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் ஆத்திரமடைந்த பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலை மறியல் குறித்து நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கூறியதாவது நல்லாம்பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் இருந்தும், திருச்செங்கோடு, குமரமங்கலம், எலச்சிபாளையம், நல்லாம்பாளையம்,வையப்பமலை, குருசாமி பாளையம்,ஆண்டகலூர்கேட், ராசிபுரம் என பேருந்து வழித்தடம் கொடுத்திருந்தும்சாலை அகலமாக்கும் பணி நடந்ததற்கு பிறகு நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதே இல்லை.அரசு போக்குவரத்து கழகத்தை பொருத்தவரை நல்லாம்பாளையம் என்ற கிராமம் இருப்பதே பொதுமக்கள் அங்கு வசிப்பதே தெரிவதில்லை. பலமுறை போராட்டம் நடத்தியும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தில் முறையிட்டோம்.இதனை எடுத்து இந்த பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை வைத்ததற்கு பிறகு தனியார் பேருந்துகள் சில அரசு பேருந்துகள் நின்று செல்கின்றன அதுவும் சில நாட்கள் மட்டுமே நடந்தது. இதனைத் தொடர்ந்துநாங்களே பேருந்து நிறுத்தத்தில் நின்று பலமுறை பேருந்து நிறுத்தி பொதுமக்களை ஏற்றி இறக்கி அனுப்பியுள்ளோம். இந்த நிலையில் இன்று மதியம் தேர்வு எழுதிவிட்டு வையப்பமலையிலிருந்து ஆத்தூர் டெப்போவை சேர்ந்த 1379 என்ற எண் கொண்ட பேருந்தில் மதியம் 1:30 மணி சுமாருக்கு 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் பேருந்தில் ஏறி, நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க டிக்கெட் கேட்டபோது, டிக்கெட் தர மறுத்ததோடு நல்லாம்பாளையத்தில் பேருந்து நிற்காதே எனக்கூறி இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்ள கொன்னையார் பகுதியில் கொண்டு போய் இறக்கி விட்டுள்ளனர். மாணவிகள் இருவரும் வீட்டுக்கு வராததை கண்டு பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தேடிப் பார்த்தபோது கொன்னையாரிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது ஓட்டுநர் எதிரில் வரும் ஏழு A என்ற நகரப் பேருந்தில் ஏற்றி அவர்களை அனுப்பி விடலாம் என ஓட்டுனர் கூறியதற்கு, அந்த பேருந்தில் இருந்த நடத்துனர் இவர்களை இங்கு இறக்க கூடாது, திருச்செங்கோட்டில் கொண்டு போய் இறக்கி விட வேண்டும். அங்கிருந்து திரும்பி வந்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும் என கூறியதோடு அந்த சிறுமிகளை ஏய் புள்ளைங்களா என ஒருமையில் பேசிஅவமரியாதை செய்துள்ளனர். இதுகுறித்து ஊர் பொதுமக்கள் தகவல் அறிந்து இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டோம் என கூறினார். இதுகுறித்து அரசுபேருந்தில் பயணம் செய்த மாணவி தனுஷி கூறியதாவது இன்று மதியம் சுமார் ஒன்று முப்பது மணிக்கு வையப்பமலையில் ஏரி என்னப்பாளையம் நல்லம்பாளையம் பகுதியில் இரங்கல் டிக்கெட் கேட்டோம் டிக்கெட் கொடுக்க மறுத்ததோடு எங்களை நல்லாம்பாளையத்தில் இறக்கப்படும் இறக்க முடியாது பேருந்து நிற்காது என கூறிய நடத்துனர் இரண்டு கிலோமீட்டர் தள்ளி சென்று பேருந்து நிறுத்தி இறங்கிக் கொள்ளச் சொன்னார்.அதுவரை போய் உட்கார்ந்து பிள்ளைங்களா என மரியாதை இல்லாமல் அதிகாரத்தோடும் பேசினார் இதில் பயந்து போன நாங்கள் கொன்னையாரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து ஊருக்கு வந்தோம் அப்போது ஓட்டுநர் எதிரில் வந்த நகரப் பேருந்தில் ஏற்றி அனுப்பி விடலாம் என கூறியதற்கு நடத்தினர் இவர்கள் இங்கு இருக்க கூடாது எழுச்சி பாளையத்தில் தான் கொண்டு போய் இறக்கி விட வேண்டும் என கூறினார் என தெரிவித்தனர். சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த எலச்சி பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் போலீசார் உடன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் திருச்செங்கோடு பிரான்ச் மேனேஜரிடம் பேசி பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாகவும் பெண் பிள்ளைகளை இதுபோல் இரண்டு கிலோமீட்டர் தள்ளி இறக்கிவிட்டு அவமரியாதையை பேசிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறைக்கு சொல்வதாகவும் கூறியதை அடுத்து சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் திருச்செங்கோடு ராசிபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story