கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து திமுக கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
Karur King 24x7 |26 Sep 2024 7:26 AM GMT
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து திமுக கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து திமுக கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக செயலாற்றியவர் கரூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 -16 அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அவரது பனிக்காலத்தின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த வழக்கில் ஏற்பட்ட சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரை கைது செய்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த செந்தில் பாலாஜி, பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்ட போதும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திமுகவினர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அவர் போட்டியிட்டு வென்ற கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திடீரென ஒன்று கூடிய திமுக கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள செந்தில் பாலாஜியின் விசுவாசிகள், ஆதரவாளர்கள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதனால் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.
Next Story