திருப்பூரில் பொதுகணக்கு குழு சார்பில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் இதன் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையின் பேட்டி!
Tiruppur (North) King 24x7 |26 Sep 2024 9:18 AM GMT
திருப்பூரில் பொதுகணக்கு குழு சார்பில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் இதன் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
பொது கணக்கு குழு சார்பில் இன்று திருப்பூரில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதன் தலைவராக உள்ள செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி இருப்பதை வரவேற்பதாகவும் பாஜக எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கை தொடுப்பதும் பின்னர் பாஜகவில் இணைந்தால் அதனை வாபஸ் பெறுவதையும் வழக்கமாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டியா அவர் செந்தில் பாலாஜியை இத்தனை நாட்கள் ஏன் சிறையில் அடைத்து இருந்தார்கள் என கேள்வி எழுப்பினார் மேலும் அவர் அமைச்சர் ஆவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் அதிகாரம் கேட்பது தொடர்பாக நோ கமெண்ட்ஸ் என தெரிவித்தார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரவேற்கத்தக்கது என்றும் விடுபட்ட குளங்கள் இருந்தால் விரைவில் இணைப்பார்கள் என தெரிவித்த அவர் இது போன்ற திட்டங்களால் தான் நிலத்தடி நீர் உயரும் என தெரிவித்தார். மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டே இருப்பதாகவும் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story