தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது
பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது
பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், ஆகியோர் தலைமை தாங்கினர். நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலை வகித்தார் . இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் தூய்மை பணியாளருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, பொது மருத்துவம், நம்பிக்கை மையம் பரிசோதனை, பிசியோதெரபி, மனநல மருத்துவ பரிசோதனை, காசநோய் பரிசோதனை, நடமாடும் காச நோய் எக்ஸ்ரே பரிசோதனை, வாகனம்  மூலமாக இருதய பரிசோதனை, தொழுநோய் பரிசோதனை, உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தது . மேலும் இந்த நிகழ்வில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், திமுக வார்டு உறுப்பினர்கள், எலந்த குட்டை வட்டார மருத்துவ அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Next Story