ஆவடி ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கிய நிலையில் கலெக்டர் ஆய்வு
Tiruvallur King 24x7 |26 Sep 2024 11:37 AM GMT
எதிர்வரும் கனமழை காலத்தில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு எடுக்கப்படும் பொதுமக்கள் பாதாள சாக்கடை பயன்படுத்த முன்வர வேண்டும்,அப்பொழுது கழிவு நீர் பிரச்சனை குறையும் கலெக்டர் பேட்டி
எதிர்வரும் கனமழை காலத்தில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு எடுக்கப்படும் பொதுமக்கள் பாதாள சாக்கடை பயன்படுத்த முன்வர வேண்டும்,அப்பொழுது கழிவு நீர் பிரச்சனை குறையும் கலெக்டர் பேட்டி திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில்13 செ.மி கன மழை கொட்டி தீர்த்தது.இதனால் நகரின் பல ஏரி குளங்கள் நிரம்பின. இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடிக்கும் மேலாக மழை நீர் தேங்கி உள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள.சுரங்கப்பாதை மூடபட்டுள்ளதால் சேக்காடு, கோபாலபுரம், தென்றல் நகர்,கரிமா நகர்,ஆவடி,ஆவடி காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதே போன்று ஆவடி,பட்டாபிராம்,அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல முடியாமலும், அவசர தேவைக்காக,மருத்துவ அவசரங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் 3 ராட்சத மின்மோட்டார் கொண்டு வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ள நிலையில் அகற்ற மேற்கொள்ளப்பட்ட அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மழை நீர் வடி கால்வாய்களை பார்வையிட்டு, மழை நீரை வெளியேற்றுவதற்கான உடனடி தீர்வை செய்யும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சேக்காடு சுரங்கபாதையில் மழை நீர் தேங்கியுள்ளது, அவற்றை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. வரும் மழைக்காலங்களில் இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க செய்ய வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்தோம். விரைவில், தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டு, அடுத்த கனமழைக்குள் வெள்ளப்பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் ஆவடி மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் பல்வேறு வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அவற்றில் பெருபாலான பணிகள் முடிந்துள்ளன. அதனால், மழைநீர் தேங்கும் இடங்களில் கூட வெள்ளப்பாதிப்பு ஏற்படாததை காண முடிகிறது. ஒரே நேரத்தில் அதிகபட்ச மழை பெய்யும் போது, வெள்ளம் தேங்குவதை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை வடிய செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பெரும்பாலான வார்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியும் நடந்து வருகிறது. பொதுமக்கள் தாமாக முன் வந்து ஆர்வத்துடன் இணைப்பு கொடுக்கும் போது, அவை பாதுகாப்பாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும். 2021 ல் தான் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்க உள்ளன. இவை அனைத்தும் முடியும் போது, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
Next Story