பவானிசாகர் வனத்தில் உள்ள கெஜலட்டி தர்கா தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
Bhavanisagar King 24x7 |26 Sep 2024 12:15 PM GMT
பவானிசாகர் வனத்தில் உள்ள கெஜலட்டி தர்கா தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பவானிசாகர் வனத்தில் உள்ள கெஜலட்டி தர்கா தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பவானிசாகர் வனப்பகுதியில் கெஜலட்டி தர்கா = சந்தனக்குட உரூஸ் விழா நிபந்தனைகள் குறித்து வனத்துறை பேச்சுவார்த்தை பவானிசாகர் வனப்பகு தியில் உள்ள கெஜலட்டி தர்கா தொடர்பான அமை திப் பேச்சுவார்த்தை கூட்டம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத் தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் பழமை வாய்ந்த திப்பு சுல்தான் காலத்து தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் சந்தனக்குட குட உரூஸ் விழா நடத்தப்படுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு விழா நாளை (27ஆம் தேதி) தொடங்கி 30ஆம் தேதி (ஞாயிறு) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.அடர்ந்த வனப்பகுதியில் தர்கா அமைந்துள்ளதால் விழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நேற்று மாலை சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் நடை பெற்றது. சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஸ் முன்னிலை வகித்தனர். பவானி சாகர் வனச்சரக அலுவலர் சதாம் உசேன் அனைவரையும் வரவேற்றார். இதில் விழா கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் விழா குழுவினரிடம் அறிவுறுத்தினர். அதன்படி வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் விழா நடத்தப்பட வேண்டும். போதை தரும் பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள். பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுசெல்லக்கூடாது. பக்தர்கள் தங்கள் குடும்பத் தினர் அல்லாமல் மற்ற அந்நியர்களை அழைத்து வரக்கூடாது. அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. வனப்பகுதியில் ஓடும் மாயாற்றிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். விழா நடைபெறும் மூன்று நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு நூறு வாகனங்கள் மட்டுமே வனப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை கள் மற்றும் நிபந்தனைகளை அதிகாரிகள் விழா கமிட்டியினரிடம் தெரிவித்தனர். விழா கமிட்டியினர் நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு விழா நடத்துவதாக உறுதி அளித்தனர்.
Next Story