திருப்பத்தூர் அருகே சாலை மறியல்
Tirupathur King 24x7 |26 Sep 2024 12:21 PM GMT
திருப்பத்தூர் அருகே சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளியில் கழிவறை கட்டிடத்தை இடித்ததால் மாணவ மாணவிகள் அவதி! பெற்றோர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்! திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் 81 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் இந்த நடுநிலைப் பள்ளியில் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு பழைய கட்டிடங்கள் சமையலறை மற்றும் கழிப்பறைகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் இடித்துள்ளனர். இரண்டு மாதங்களாக கழிப்பறை இல்லாமல் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பெற்றோர்கள் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கைக எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குரும்பேரி வழியாக சிம்மணபுதூர் செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அறிந்த ஆதி திராவிட நல அலுவலர் கதிர் சங்கர் மற்றும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
Next Story