புறநகர் பகுதிகளில் கொட்டப்படும் மாட்டிறைச்சி கழிவுகள்

புறநகர் பகுதிகளில் கொட்டப்படும் மாட்டிறைச்சி கழிவுகள்
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் கொட்டப்படும் மாட்டிறைச்சி கழிவுகள் மாசுபடும் சூழலில் நிலத்தடி நீர்
திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் மாட்டிறைச்சி கழிவுகளான மாட்டுக் கொழுப்பு, மாட்டு ஜவ்வு கொட்டப்படுவதோடு ,இதை உலர வைத்தபின் பல்வேறு பொருட்களின் கலப்படத்திற்காக தினம்தோறும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.இதோடு இதன் கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசுப்படும் நிலையும் உருவாகி உள்ளது.திண்டுக்கல் புற நகர் பகுதிகளான திண்டுக்கல் - மதுரை ரோடு, வத்தலகுண்டு ரோடு, பொன்மாந்துதுறை புதுப்பட்டி செல்லும் ரோடுகளில் பட்டா , அரசு நிலங்கள், குளங்களில் ஈரோட்டை மையமாக வைத்து கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாட்டிறைச்சி கழிவுகளான மாட்டுக் கொழுப்பு, மாட்டு ஜவ் உள்ளிட்ட கழிவுகள் இரவு நேரங்களில் தினம்தோறும் லாரிகளில் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றன. இதை சிலர் நன்கு உலர வைத்து மிஷின்கள் மூலம் வேக வைத்து பொடியாக அரைக்கப்படுகிறது. இதன் பின் இவைகள் உணவு பொருட்களில் கலப்படம் செய்ய ஈரோடு, திருப்பூர், கோயம்புத்துார் உள்ளிட்ட மாவட்டங்கள் , வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.இது போன்ற மாட்டு கொழுப்பு பொடிதான் திருப்பதி லட்டு பிரசாத்திற்கு பயன்படுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் மக்களிடையே நிலவுகிறது .இது போன்று நடப்பது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் கண்டுக்கொள்ளாதது ஏனோ என்பதும் புதிராக உள்ளது. மத்தியரசு துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தினால் பல்வேறு புதிர்கள் வெளிச்சத்திற்கு வரும் .இதோடு திண்டுக்கல் நகரில் கொட்டப்படும் மட்டிறைச்சி கழிவுகளால் துர்நாற்றத்துடன் பெரும் சுகாதாக்கேடும் ஏற்படுகிறது.இதன் காரணமாக நிலத்தடி நீர் மாசுபடுவதோடு நோய் தொற்று ஏற்படும் சூழலும் நிலவுகிறது. ஆண்டுக்கணக்கில் நடக்கும் இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தும் கண்டும், காணாததுபோல் உள்ள நிலையில் இனியாவது இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story