சேத்துப்பட்டு அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது.

X
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததின்பேரில் சேத்துப்பட்டு எஸ்ஐ நாராயணன், தனிப்பிரிவு காவலர் சுபாஷ், காவலர் ஜெகன், ஆகியோர் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேத்துப்பட்டு, அடுத்த மேல்வில்லிவலம், கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வீட்டின் அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதிரடியாக சோதனை செய்தபோது. இவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான கூல் லிப் 35 பண்டல், விமலா பாக்கு10 பண்டல் உள்பட தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து. ராமஜெயம் மகன் உதயகுமார்(26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து,கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

