குழந்தைகளை விற்பனை செய்து வந்த வழக்கில் மேலும் மூன்று புரோக்கர்கள் கைது

குழந்தைகளை விற்பனை செய்து வந்த வழக்கில் மேலும் மூன்று புரோக்கர்கள் கைது
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இளம் தம்பதியர் பெற்ற குழந்தைகளை ஒவ்வொன்றாக விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட திம்ம பொதியான் வளவு பகுதியைச் சேர்ந்த சேட்டு(25)இவரது மனைவி குண்டு மல்லி(23)இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இந்த ஏழு வருடங்களில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளது.அதில் இரண்டு குழந்தைகள் இறந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவதாக பிறந்த குழந்தையை விற்க்க முயற்சித்துள்ளனர். அப்போது தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் ராஜலிங்கம் குழந்தைகளை விற்பனை செய்ய சென்ற குண்டுமல்லியின்  கணவர் சேட்டு மற்றும் குழந்தையோடு பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்து  வழக்கு பதிவு செய்து குழந்தைகளை விற்பனை செய்ய புரோக்கராக செயல்பட்ட  தந்தை உள்பட மூன்று பேர் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையை இன்று எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி மற்றும் பூலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மலர்விழி தலைமையில் விசாரணை மேற்கொண்டு மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று தேவூர், புல்லாக்கவுண்டம்பட்டி, அக்ரஹாரம் பெருமாள் மகன் தமிழ்ச்செல்வன்(45) இவரது மனைவி லோகாம்பாள் (35), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஜிகே மூப்பனார் நகர் பாலாமணி(39) ஆகியோர கைது செய்த பூலாம்பட்டி போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி ஏழு வருடத்தில் ஆறு குழந்தைகளை பெற்று நான்கு குழந்தைகளை விற்ற தம்பதியர் மற்றும் குழந்தைகளை பணத்திற்காக விற்பதற்கு புரோக்கர்களாக செயல்பட்ட ஐந்து பேர் கைது நடவடிக்கையால் பொதுமக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story