தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் விருத்தாசலம் சார்நிலை கருவூல அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்பாட்டம்

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீராசாமி தலைமையில் அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர்கள் சம்மேளனம் அறைகூவலுக்குக்கு இணங்க புதிய ஓய்வூதியத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

