நெம்மக்கோட்டை சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை விழா
Alangudi King 24x7 |27 Sep 2024 3:15 AM GMT
நெம்மக்கோட்டை சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை விழா
ஆலங்குடி அருகே உள்ள நெம்மகோட்டையில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலில் லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் நடைபெற்று வரும் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு சித்தி விநாயகருக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று பின்னர் சித்தி விநாயகருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு 501 சங்கால் சித்தி விநாயகருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சித்தி விநாயகருக்கு லட்சம் புஷ்பங்களைக் கொண்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை தரிசனம் செய்தனர்.
Next Story