சின்னசேலத்தில் விழிப்புணர்வு கூட்டம்

சின்னசேலத்தில் விழிப்புணர்வு கூட்டம்
கூட்டம்
சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் தேர்தல் பதவிக்காலம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ.,க்கள் ரவிசங்கர், ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம் வரவேற்றார். தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கும், 2021ம் ஆண்டு 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. முதற்கட்டமாக நடந்த 27 மாவட்டங்களுக்கான தேர்தல் பதவிக்காலம் நடப்பாண்டு முடிவடைய உள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக நடந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி பதவிகள் கலைக்கப்படும் என தகவல் பரவியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 9 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினர். அதில், 2026ம் ஆண்டு வரை பதவிக்காலம் இருக்கும் என தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியது. இது தொடர்பாக நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், பதவிக்காலம் குறித்து அச்சமடையாமல் மக்கள் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பி.டி.ஓ., ரங்கசாமி நன்றி கூறினார்.
Next Story