கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி
பயிற்சி
சித்தால் கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் பன்னாரி அம்மன் சர்க்கரை ஆலை இணைந்து கரும்பு சாகுபடி விவசாய குழுக்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த சித்தால் கிராமத்தில் நடந்த பயிற்சி கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வளர்மதி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கரும்பு அலுவலர் ஹரிதேவன் மானிய திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில், கரும்பு சாகுபடியில் ஒரு பரு கரும்பு குழு தட்டு நாற்றாங்கால் தயாரித்தல், போதிய இடைவெளி விட்டு நடவு செய்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள், நுண்ணீர் பாசனம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் வினோத், உழவியல் அலுவலர் சிவசங்கர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி அலுவலர் சதீஷ்மன்னன், பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் வரதராஜன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகனேஷ்வர் உட்பட பலர் பங்கேற்றனர். சாட்டர்ஜி நன்றி கூறினார்.
Next Story