திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்
Tirupathur King 24x7 |27 Sep 2024 7:39 AM GMT
திருப்பத்தூரில் சர்வதேச காது கேளாதோர் இன மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் சர்வதேச காது கேளாதோர் இன மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணியில் மாவட்ட ஆட்சியருக்கு ரோஜா பூ கொடுத்த வரவேற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலத்துறை திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் சர்வதேச காது கேளாதோர் தின மற்றும் இந்திய செய்கை மொழி தினத்தை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன் தலைமையில் பேரணி நடைபெற்றது அதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பேரணியில் கலந்து கொண்டனர் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் பேரணியை துவக்கி வைக்க வரும்பொழுது மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் கையில் வைத்திருந்த ரோஜா பூவை கொடுத்து வரவேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் அதன் பின்னர் இந்த பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். அனைவரும் செய்கை மொழியை கற்றுக் கொள்வதன் மூலமாக செவித்திறன் குறைபாடு உடையோர் மற்றும் வாய் பேச இயலாதரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மூடநீக்கு வல்லுனர் இனியன், எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவன இயக்குனர் தமிழரசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story