லாட்டரி சீட்டு விற்ற மூன்று பேர் கைது
கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட விட்டுகட்டி, கொடிக்கால் தெரு, சந்தைப்பேட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற ரவி (63), கார்த்திக் (34), ராஜேந்திரன் (60) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 42 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story