கரூரில் நடைபெற்ற ஜூலை மாத கொலை வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
Karur King 24x7 |27 Sep 2024 11:24 AM GMT
கரூரில் நடைபெற்ற ஜூலை மாத கொலை வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கரூரில் நடைபெற்ற ஜூலை மாத கொலை வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தொழிற்பேட்டை பகுதியில் ஜூலை மாதம் 27ஆம் தேதி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கரூர் வடக்கு காந்திகிராமம் ஈபி காலனி, பாரதியார் தெருவை சேர்ந்த தங்க ரத்தினம் மகன் ஹரி பிரசாத் வயது 21 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஹரி பிரசாத் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று செப்டம்பர் 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் ஹரி பிரசாத் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே சசிகுமார்,மதன், பாண்டீஸ்வரன், சுதாகர்,மதன் கார்த்திக், ஜெயா என்கிற அருண்குமார் ஆகிய 6- பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய கரூர் காவல் துணை கண்காணிப்பாளர், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்தார்.
Next Story