மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்- வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு திருப்பூர் மாவட்டம்!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில் முறையாக குடிநீர் இணைப்புகள் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றுவதில்லை என தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் இன்று பேரூராட்சி மன்ற கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது. கடந்த இரண்டு வருட காலமாக அனைத்து வார்டுகளிலும் முறையாக குடிநீர் இணைப்புகள் வழங்குவதில்லை , கழிவுகளை அகற்றுவதில்லை, முறையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை இதனால் தங்களது வார்டுகளில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களால் பதில் சொல்ல முடியவில்லை என மன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து செயல் அலுவலர் , பேரூராட்சி மன்ற தலைவர் முறையான பதில் வழங்கவில்லை எனக்கூறி அனைத்து மன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Next Story






