மடத்துக்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் குடியிருக்கும் பகுதியில் தனிநபர் ஒருவர் கட்டி வரும் வணிக வளாகம் சாலையை ஆக்கிரமித்து இருப்பதாகவும், இதனால் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருவதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
Next Story






