பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு
மயிலாடியில்
குமரி மாவட்டம் தோவாளை மெயின் கால்வாய் எங்குமே தூருவாராதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வந்து சேராத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து பொதுப்பணி துறையிடம் முறையிட்டும் பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.         இதனால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களது  சொந்த செலவில் தோவாளை பிரதான கால்வாயில் நிலைப்பாரை தலை மதகு பகுதியில் தூர்வாரி தண்ணீர் கொண்டு சென்றனர்.         இந்த நிலையில் பொதுப்பணித்துறை அந்த தண்ணீரை  நிறுத்தி விட்டு ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.         இதை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும்  குமரி மாவட்ட விவசாய சங்கங்கள் அனைத்தும்  இணைந்து தோவாளை கால்வாயில் தண்ணீர் திறக்க கேட்டு  இன்று (27ஆம் தேதி) மயிலாடி பொதுப்பணித் துறை அலுவலகத்தில்  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.        இந்த போராட்டத்தில் பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, தோவாளை கால்வாய் தலைவர் சேகர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மயிலாடி பாசன பிரிவு உதவி பொறியாளர் வல்சன் போஸ் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story