தாராபுரத்தில் மொபட்டில் மணல் திருட்டு

தாராபுரத்தில் மொபட்டில் மணல் திருட்டு
தாராபுரத்தில் மொபட்டில் மணல் திருட்டு
தாராபுரத்தில் மொபட்டில் மணல் திருட்டு தாராபுரத்தில் மொபட்டில் மணல் திருட்டு தொடர்ந்து் நடைபெறுகிறது.வருவாய்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தாராபுரம் அமராவதி ஆற்றில் கொளிஞ்சிவாடி படுகை பகுதியில் ஆற்றில்  மொபட் செல்ல வழிதடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சாக்குகளில் மணல்மூட்டை களாக கட்டப்பட்டு கரைக்கு கொண்டுவரப்படுகிறது.கரைகளில் அடுக்கி வைக்கப்படும் மணல் மூட்டைகள் பின்பு மொபட்முலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.பட்டப்பகலிலேயே  இப்பணிகள் நடக்கிறது.மணல்மூட்டைகள் ஒன்று ரு75 வரை விற்கப்படுகிறது. கட்டுமான பணிக்கு எம்சேண்டு பயன்படுத்தப்படுகிறது.பூச்சு வேலைக்கு பெரும்பாலோனர் மணலையே விரும்புகின்றனர்.மேலும் மணல் சந்துகள் மற்றும்லாரி இதர வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு கூட மொபட் செல்வதால்மணலுக்கு கிராக்கி உள்ளது.அமராவதி ஆற்றுப்படுகையில் மணல் எடுப்பதால் நீர்ஊற்றுகள் அழிக்கப்படும்.குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால்மணல்எடுக்க வருவாய்துறையினர் தடை விதித்துள்ளனர். தடையை மீறி நடைபெறும் திருட்டை வருவாய்துறையினர் காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.
Next Story