இலுப்பூர் அருகே கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி!

இலுப்பூர் அருகே  கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி!
துயரச் செய்திகள்
இலுப்பூர் அருகேயுள்ள இருந்திராப்பட்டி ஆத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் அன்புச்செல்வன் (21). ஜேசிபி இயக்குநரான இவர் தனது நண்பர்களுடன் இலுப்பூரை அடுத்துள்ள வளதாடிப்பட்டி சென்று பன்னீர்செல்வம் என்பவரின் விவசாய கிணற்றில் குளித்துள்ளார். நண்பர்கள் குளிக்காமல் கிணற்றுக்கு மேல் அமர்ந்துள்ளனர். 70 அடி ஆழமுள்ள 40 அடி நீர் நிரம்பிய கிணறு என்பதால், ஆழம் அதிகமாக இருந்துள்ளது. மேலும், கிணற்று நீருக்கு அடியில் பாசான் கொடி வளர்ந்து கிடந்துள்ளது. இதையறியாமல் நீருக்குள் மூழ்கி சென்று குளிக்க முற்பட்டபோது பாசான் கொடியில் அவர் சிக்கினார். நீருக்குள் சென்ற அன்புசெல்வன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் நண்பர்கள் இலுப்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்னர். நிகழ்விடம் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் கிட்டப்பா (பொ) தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாசன் கொடிக்குள் சிக்கி சடலமாக கிடந்தவரை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த இலுப்பூர் போலீஸார் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி : உடற்கூறு ஆய்வுக்கு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story