மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை!

குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை: மாத்துார் காவல் சரகம் ஊரத்தி ப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி பிரியா. கடந்த 22.12.2020 அன்று வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்று மனைவியை, சேட்டு திட்டியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரியா உடலில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயமடைந்த அவர் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந் தார். பிரியா அளித்த மரண வாக்குமூலம் மற்றும் அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் சேட்டுவை மாத்துார் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுகை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ரஜினி விசாரித்து மனைவி தற்கொலைக்கு காரணமான கணவர் சேட்டுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
Next Story