இறந்த ஆடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பாடை கட்டி எடுத்துச் சென்ற விவசாயிகள்

காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் முன்பு நடைபெற்ற இறந்த ஆடுகளுடன் போராட்டம் பாடைகட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயி செந்தில்குமார் என்பவரது  தோட்டத்தில் உள்ள ஆட்டு பட்டியில் இருந்த 25க்கும் மேற்பட்ட ஆடுகளை நாய்கள் துரத்தி கடித்ததில்  3 செம்மறி ஆடுகள் மற்றும் 4 வெள்ளாடுகள் நேற்று அதிகாலை பலியானது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் ஆகும். மேலும் 3 க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர் . இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இரவிலும் போராட்டம் நடைபெற்றுது. இரவில் நடந்த போராட்டத்தின் போது துக்க நிகழ்வில் ஒப்பாரி பாடல் பாடுவது போல் ஒப்பாரி பாடலை பாடி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் இறந்த ஆடுகளின் பிரேதத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.   நள்ளிரவிலும் விவசாயிகள்  காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் முன்பு சாக்கடையின் துர்நாற்றத்தில் கொசுக்கடி இடைர்படுகளுக்கு இடையே அங்கேயே படுத்து உறங்கினர் பின்னர் நேற்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி ஆட்டோகளில் ஏற்றிக்கொண்டு 100க்கு மேற்பட்ட விவசாயிகள் முகத்தில் கருப்பு கலர் மாஸ்க் அணிந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து புறப்பட்டுச் சென்றனர். இறந்த ஆடுகளுடன் துர்நாற்த்ததுடன் விவசாயிகள் இரண்டாவது நாளாக போராடி வருவதும் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் உரிமை கோராத நாய்களை அரசு அப்புறப்படுத்த வேண்டும், இறந்த ஆடுகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற
Next Story