சத்தியமங்கலத்தில் குடும்பத்தகராறில் போலீஸ் ஏட்டு தற்கொலை

சத்தியமங்கலத்தில் குடும்பத்தகராறில் போலீஸ் ஏட்டு தற்கொலை
சத்தியமங்கலத்தில் குடும்பத்தகராறில் போலீஸ் ஏட்டு தற்கொலை
சத்தியமங்கலத்தில் குடும்பத்தகராறில் போலீஸ் ஏட்டு தற்கொலை சத்தியமங்கலத்தில் குடும் பத்தகராறில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் ஏட்டு கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 50). இவர் சத்தியமங்கலம்- அத்தாணி ரோட் டில் உள்ள தவளகிரி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரபாவதி (40). இவர்களுடைய மகள்கள் பிரீ விசா (23), விபிஷா. இதில் பிரீவிசா கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறார். விபிஷா கோவையில் உள்ள கல்லூரி யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்கொலை இந்த நிலையில் வெங்கடேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வருகின்றனர். சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வெங்கடேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்பத்தகராறில் வெங்கடேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story