ட்ரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊடகத்துறையிலும் தடம் பதிக்கலாம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி அரங்கேறியது.

நாமக்கல் மோகனூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ட்ரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊரகத் துறைகளிலும் தடம் பதிக்கலாம் என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறையின் இதழியல் & ஊடகத் துறை மன்றங்களின் சார்பில் 'ஊடகத்துறைகளிலும் தடம் பதிக்கலாம் " என்ற தலைப்பிலான நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் எம் ஆர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். கல்லூரி வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் வாழத்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி செயல்பாட்டாளர் கே எம் சரவணன் மற்றும் சின்னத் திரை வசனகர்த்தா மற்றும் ஊடகவியாளர் மித்ரா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள், திரைப்படம், இணையத்தளம், சமூக வலைத் தளங்கள் மற்றும் பிற ஊடகங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். இதில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் எல்.தீபிகா, கே. கௌரிமாலா உட்பட ஆங்கிலத் துறை பேராசிரியைகள், ஆங்கிலம் மற்றும் தமிழ்த்துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story