சுயதொழில் துவங்க பெண்களுக்கு அழைப்பு
Dindigul King 24x7 |28 Sep 2024 5:33 AM GMT
சுயதொழில் துவங்க பெண்களுக்கு அழைப்பு
திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கை: கைம்பெண்கள் ,ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து சுயதொழில் துவங்கி மானியம் பெற திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள்,பேரிளம்பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பம் பதிவு செய்ய www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் துவங்கப்பட்டது. ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருத்தல் வேண்டும். 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். சுய அறிவிப்பு சான்று ,வருமானச்சான்று,குடும்ப அட்டை ,ஆதார் அட்டை நகல்,தற்போது வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்றுடன் பதிவு செய்த விண்ணப்பத்தினை இணைத்து திண்டுக்கல் கலெக்டர் வளாகம் மாவட்ட சமூக நல அலுவலகம் என்ற முகவரிக்கு அக்.15க்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
Next Story