முள்ளிப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

முள்ளிப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
முள்ளிப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் முள்ளிப்பாடி ஊராட்சி தலைவர் நீலா வேல்முருகன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடவூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜ்,மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் சரோஜா சின்னசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2023 மற்றும் 24 ஆம் ஆண்டு சமூக தணிக்கை தொடர்பாக, செப்டம்பர் 23ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 28 வரை வரை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சமூகத் தணிக்கை தொடர்பாக இறுதி அறிக்கை தயார் செய்வதற்காக நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள சேர்வைக்காரன் பட்டி நூலகம் அருகில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் முக்கிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story