உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் புதிய பாசன பகுதிகளான திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்கள் பாசன பகுதிகளுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233.60 மில்லியன் கன அடி க்கு மிகாமலும் அமராவதி புதிய பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 440 கன அடி வீதம் 2,661. 12 மில்லியன் கன அடிக்கு விடாமல் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 தேதி வரை 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்று அடிப்படையில் மொத்தம் 6894.22 வழங்கப்படும் பொதுபணத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் தண்ணீர் திறப்பின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 47, 117 ஏக்க நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் அமராவதி அணையின் மொத்த தொண்ணூறு அடிகள் தற்பொழுது 87.14அடியும் நீர்வரத்து 30 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story