வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்த நரிக்குறவர்கள்!!
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்த நரிக்குறவர்கள்!!
உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்கள்!!
திமுக அரசு பொறுப்பேற்று, வயலூர் நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட எந்த ஒரு நல்ல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தாமல் நரிக்குறவ இன மக்களை வஞ்சிப்பதாக கூறி , உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்த நரிக்குறவர்கள்!! காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதி காரனை ஊராட்சிக்கு உட்பட்ட, வயலூர் கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறி , வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது!!
வயலூர் கிராமத்தில் நரிக்குறவர் மக்களுக்கு- 100 நாள் வேலை நிரந்தரமாக வழங்கிட கோரியும் , தெரு விளக்குகள், சாலை வசதிகளை- மேம்படுத்திடவும், அனைத்து நரிக்குறவர் வீடுகளுக்கும்- குடிநீர் திட்டத்தினை முறையாக இணைப்புகள் வழங்கி சுகாதார குடிநீர் வழங்கிடவும், தொடர்ந்து மறுக்கப்படும் ஜாதி சான்றிதழ் வழங்கிட கோரியுமஉத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வயலூர்- 6 -வார்டு உறுப்பினர்-நரிக்குறவர் சத்யா--கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் நரிக்குறவ மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினர்!!
எந்தப் பிரச்சனைக்கும் மனுக்கள் மூலம் புகார் அளித்தால், உரிய விசாரணையோ?? அல்லது நடவடிக்கைகளையோ?? எடுப்பதில்லை எனவும் திங்கள் தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தால் அதற்கும் தீர்வு காணவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்!!
தேர்தல் சமயத்தில் நரிக்குறவர்களின் ஓட்டுகளுக்காக கண் துடைப்பு நாடகங்களை அரசியல்வாதிகள் அரங்கேற்றுவதாகவும், ஆட்சி அதிகாரத்தில் வந்தவுடன் நரிக்குறவர் மக்களை கண்டு கொள்வதில்லை என ஆவேசமாக அமளி-துமளியில்- ஈடுபட்டனர். உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்- லோகநாதன் வயலூர் நரிக்குறவர்களிடையே உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக சமரச பேச்சு நடத்தியதன் பேரில் நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுத்து கலைந்து சென்றனர் . இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.