பரமத்தி அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.

Paramathi Velur King 24x7 |28 Sept 2024 7:56 PM ISTபரமத்தி அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது.
பரமத்தி வேலூர் செப்,:28 பரமத்தி வேலூர் அருகே பரமத்தி அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
