போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்
Virudhachalam King 24x7 |28 Sep 2024 5:52 PM GMT
டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை துவக்க விழா நிகழ்ச்சியாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பேசியல் ராஜ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் துரை பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசளித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகோதண்டம், உதவி தலைமை ஆசிரியர் சந்தோஷ்குமார், வெங்கடேசன், ரவிச்சந்திரன், குறிஞ்சி செல்வன், ஓவியர் சுரேஷ், தமிழ் ஆசிரியர் ஜெகன்ஜோதி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, பாலக்கொல்லை கிராமத்திலிருந்து நடியப்பட்டு பள்ளிக்கூடம் வரை மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முடிவில் ஓவிய ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.
Next Story