தீயணைப்புத்துறையினர் ஒத்திகை பயிற்சி.
Arani King 24x7 |29 Sep 2024 12:32 AM GMT
ஆரணி அடுத்த காமக்கூர் ஏரியில் இயற்கை பேரிடரிலிருந்து மீட்பது குறித்து ஆரணி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
ஆரணி அடுத்த காமக்கூர் ஏரியில் இயற்கை பேரிடரிலிருந்து மீட்பது குறித்து ஆரணி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். எதிர்வரும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் ஆரணி அடுத்த காமக்கூர் ஏரியில் இயற்கை பேரிடரிலிருந்து ஆரணி தீயணைப்புத்துறை மீட்புக் குழு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய ஏரியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சி. பூபாலன் தலைமையில் தீயணைப்பு படையினர் மூலமாக நீர் நிலைப் பகுதிகளில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால் கையில் வைத்திருக்கும் பொருளைக் கொண்டு உயிருடன் மீட்பது குறித்தும் , காலி பிளாஸ்டிக் டப்பாக்களை கொண்டு தண்ணீரில் மிதந்து வரக்கூடிய சூழல்,சேலை கயிறு போன்றவற்றை பயன்படுத்தி நீர் நிலைகளில் தத்துளிப்பவர்களை மீட்பது குறித்தும் மாதிரி செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எஸ். பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பள்ளி விடுமுறை நாட்களில் அடையபலம் கிராமத்தில் உள்ள ஏரியில் 4 சிறுவர்கள் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அந்த 4 சிறுவர்களும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவருடைய குடும்பமே இன்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இதுபோல சம்பவம் நிகழாமல் இருக்க மழை நேரங்களில் நீர்நிலைப் பகுதிகளில் குளிப்பதற்கும் , துணி துவைப்பதற்கும் அனுமதிக்க கூடாது. மேலு்ம் சிறுவர்களை ஏரியில் அனுப்ப பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது என்பதை விளக்கி பேசினார்.உடன் வட்டாட்சியர் கௌரி, மண்டல துணை வட்டாட்சியர் மலர்,காமக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஸ்வரிகோபு, வார்டு உறுப்பினர்கள், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணி செய்ய கூடிய பொதுமக்கள் , கிராம பொதுமக்கள் பலரும் பார்வையிட்டனர்.
Next Story