தனியார் கல்லூரியில் ரத்ததான முகாம்

X
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற் றும் அறிவியல் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு, கல்லுாரி சேர்மன் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.முகாமில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விஜயகுமார், தொட்டியம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். கல்லுாரி முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 53 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செங்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், விக்னேஷ் செய்திருந்தார்.
Next Story

