குமிழ்தூம்பினை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க கோரிக்கை!
Thoothukudi King 24x7 |29 Sep 2024 7:09 AM GMT
தருவைக்குளத்தில் தென்படும் குமிழ்தூம்பினை முறையாக ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கிராமத்தில் சர்வே எண் 97 ஆன மாப்பிள்ளை கண்மாயில் சுமார் 8- 10ம் நூற்றாண்டின் பழமையானதாக தென்படும் குமிழ்தூம்பினை தூத்துக்குடியினை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் இன்று கண்டறிந்துள்ளதாக தகவல் அளித்துள்ளார். இது மண் கல்லால் செய்யப்பட்டது என்பதால் தற்போது கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை என்றும், இதன் உயரம் சுமார் 167"(14') அகலம் 16.5" மற்றும் கனம் 10" எனவும், இதன் இரு குறுக்கு சட்ட பொருத்தும் பள்ளங்கள் (grooves) மட்டும் தற்போது தென்படுகிறது எனவும், முறையாக அகழாய்வு செய்திட கீழுள்ள சேறோடு துளை மற்றும் குமிழ் மடையின் அமைப்பு குறித்த உண்மை தெரியவரும் என்றும் இது குறித்து தான் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க விருப்ப தாகவும் எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த தொன்மையான வரலாற்று சின்னத்தினை முறையாக ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க உதவிட வேண்டியும் தனது கோரிக்கையை பதிவு செய்தார்.
Next Story