திமுக இளைஞரணி சார்பில் மாணவ மாணவிகள் பயிற்சி முகாம்.
Thoothukudi King 24x7 |29 Sep 2024 9:39 AM GMT
திமுக இளைஞரணி சார்பில் என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
திமுக இளைஞரணி சார்பில் என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு திமுக இளைஞரணி சார்பில் என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது இந்த பேச்சுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர் இந்த நிலையில் மண்டல அளவிலான பேச்சு போட்டியில் கலந்துகொள்ள உள்ள தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி இராமநாதபுரம் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான பேச்சு போட்டி குறித்த பயிற்சி முகாம் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது ஐந்து மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 137 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம் பெண்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர் இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து பேச்சுப் போட்டியாளர்களுக்கு பயிற்சிகளை கடலூர் புகழேந்தி எஸ் கே பி கருணா, ராஜீவ் காந்தி தமிழன் பிரசன்னா கவிஞர் சல்மா வரவனை செந்தில் கம்பீரன் அப்பாஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த பயிற்சியை அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதியழகன் ராமஜெயம் மாநகர அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story