எடப்பாடி நகர கழக திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

X
Edappadi King 24x7 |29 Sept 2024 5:16 PM ISTஎடப்பாடி பஸ் நிலையம் எதிரே நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் மற்றும் கொங்கணாபுரம் பஸ் நிலையம் எதிரே திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய உற்சாக கொண்டாட்டம்... தமிழக முழுவதும் திமுகவினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்ததை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்றதை தொடர்ந்து. தமிழக முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடிப்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகரக் கழக துணைச் செயலாளர் வடிவேல் நகர அவைத் தலைவர் மாதையன் மற்றும் பலர் கலந்த கொண்டனர்.அதேபோன்று கொங்கணாபுரம் பஸ் நிலையம் எதிரே கொங்கணாபுரம் திமுக ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையிலும் நூற்றுக்கணக்கான திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
