பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
தற்பொழுது தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கிழக்கு மாவட்ட திமுக மாநகர, நகர, ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் இளமதி திண்டுக்கல் தெற்கு ஒன்றிய செயலாளர் வெ ள்ளிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் பல்வேறு திமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்துபட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியேற்றதை கொண்டாடிய திமுகவினர்.
Next Story