பூலாம்பட்டி அடுத்த பில்லுக்குறிச்சி கால்வாயில் சிறுவர்கள் டைவ் அடித்து உற்சாக குளியல்...
Edappadi King 24x7 |29 Sep 2024 1:53 PM GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பொதுமக்கள் உற்சாக படகு சவாரி
பூலாம்பட்டி காவிரி ஆற்று படகுத் துறையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம்... சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவேரி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் காவேரி ஆற்று நீர் பறந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கிறது. காவேரி கரையோர பகுதியான நெருஞ்சிப்பேட்டை,பூலாம்பட்டி,கூடக்கல், குப்பனூர் பகுதிகளை இணைத்து மலைச் சார்ந்த பகுதியாக பசுமையான இயற்கை ரம்யமான காட்சி அளிப்பதால் இதனை குட்டி கேரளா என அழைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்து பொதுமக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர். அதேபோன்று குருவை சாகுபடி செய்வதற்காக கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது இதில் விடுமுறை நாட்கள் ஆன இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூலாம்பட்டி அடுத்த பில்லுக்குறிச்சி கால்வாயில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
Next Story